உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பசுபிக் பெருங்கடலில் சூறாவளி : இலங்கையில் மீண்டும் மழை தீவிரமடைய வாய்ப்பு!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
183 பார்வைகள்

தற்போது நிலவும் மழை நிலைமையில் நாளை (04) நண்பகல் முதல் குறைவொன்றை எதிர்பார்க்க முடிவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே இதனைத் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக ஆறாம் திகதிக்குப் பிறகு மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இதன்படி மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அதிகளவில் மழையை எதிர்பார்க்கப்படுவதாக அஜித் விஜேமான்னகே தெரிவித்தார்.

“இந்த கொந்தளிப்பான வானிலை நிலைமை நாளை (04) நண்பகலாகும்போது படிப்படியாக நம்மை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி இருப்பினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருகிறது.

அந்த நிலைமை ஆறாம் திகதியளவில் மீண்டும் தீவிரமடைவதுடன், காற்றின் வேகம் அதிகரித்து, மீண்டும் ஆறாம் திகதிக்குப் பிறகு சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதியில் மழை பெய்யக்கூடும்.” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0