உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
95 பார்வைகள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடிஅமாவாசை மகோற்சவப் பெருவிழா இன்று (03) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான மாமாங்கேஸ்வர் ஆலய உற்சவப் பெருவிழாவின் த்வஜாரோஹணம் (கொடியேற்றம்) உற்சவம் இன்று நடைபெற்றது.

மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ அலங்காரங்களுடன் கொடிமரத்தில் எழுந்தருளினார்.

பின்னர் கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள் நடத்தி வைத்தனர்.

மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத தேவாரப் பாராயணங்கள் இடம்பெற, பக்தர்களின் “அரோகரா” கோஷத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடந்தேறியது.

மாமாங்கேஸ்வரரின் கொடியேற்றத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

அமிர்தகழி மாமாங்கேஸ்வரரின் தேர்த்திருவிழா 11ஆம் திகதியும் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

70 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

55 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

41 0 0