உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தராசில் முறைகேடு செய்த நெல் கொள்வனவாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
65 பார்வைகள்

திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை, திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் உத்தியோகத்தர்கள் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இன்று விநாயகபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது நெல் மூடைகளை விற்பனைக்காக நிறுவை செய்துகொண்டிருந்த வேளையில், தராசில் முறைகேடு நடப்பதை அவதானித்துள்ளார். உடனடியாக இது குறித்து திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளருக்குத் தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அங்கு பயன்படுத்தப்பட்ட தராசின் தரத்தினைப் பரிசோதித்த போது தராசில் பிழையான அளவீடு (நிறுவை) காட்டப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

பிரதேச சபை தவிசாளரின் இந்த உடனடி நடவடிக்கையினால் குறித்த விவசாயிக்கு ஏற்படவிருந்த சுமார் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான நிதி இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட நெல் கொள்வனவாளர்கள் உடனடியாகப் பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகத் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் திருக்கோவில் பிரதேச சபை ஊடகம் விடுத்துள்ள அறிவிப்பில்,
எமது பகுதியில் இதுபோன்ற கண்டறியப்படாத மோசடிகள் பல இடம்பெற்றிருக்கலாம். இனிவரும் காலங்களில் இத்தகைய சுரண்டல்களைத் தடுப்பதற்குரிய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் அனைவரும் நெல் விற்பனையின் போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இவ்வாறான தராசு மோசடிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாகத் திருக்கோவில் பிரதேச சபையின் 067-2265018 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளவும். மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

70 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

55 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

42 0 0