உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
175 பார்வைகள்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாகக் காணப்படும் சுகாதாரப் பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களில், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள் இன்று திங்கட்கிழமை (03.08.2026) பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று முதல் எதிர்வரும் 21.08.2026 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத்தேர்வு நடவடிக்கைகளுக்காக ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தினமும் மூன்று நேரப் பிரிவுகளாக இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றனர்.

இதுவரை நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 05.08.2026 இன் பின்னர் 021 222 0807 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைச் சமர்ப்பித்து உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

70 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

55 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

42 0 0