சரிந்து விழுந்த பாரிய கற்பாறை; போக்குவரத்து பாதிப்பு.!
இன்று 3 ஆம் திகதி அதிகாலை வேளையில் ஹட்டன் போடைஸ் பிரதான வீதியில் எல்பியன் பகுதியில் பாரிய அளவிலான கற்பாறை ஒன்று சரிந்ததால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹட்டன் போடைஸ் டயகம செல்லும் குறுக்கு வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
எனவே, அவ்வீதியை பயன்படுத்த வேண்டாம் என ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.