உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
96 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை ஒன்று, அதை விரட்ட முயன்ற கிராம மக்களைத் திரும்பத் துரத்தியதால் பகுதியில் பெரும் பரப்பரப்பும் அச்சமும் நிலவியது.

கிராமத்திற்குள் புகுந்து முழுமையாகச் சுற்றித் திரிந்த காட்டு யானையை ஊரார் ஒன்றுதிரண்டு வெளியேற்ற முயன்றபோது, யானை கோபமடைந்து துரத்த முற்பட்டதால் பொதுமக்கள் நாலாப்பக்கமும் தெறித்து ஓடினர்.

எனினும், அதிர்ஷ்டவசமாகவும் இறைவனின் அருளாலும் பெரிய அளவிலான உயிர்ச்சேதங்களோ உடைமைச் சேதங்களோ இன்றி யானை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளது.

கிராமத்துப் பகுதி இளைஞர்கள் துணிச்சலுடனும் மிகுந்த பொறுப்புடனும் செயற்பட்டு, யானைக்கு எவ்வித ஆபத்தும் இன்றி அதனைப் பாதுகாப்பான முறையில் காட்டுப் பகுதிக்குள் அனுப்புவதற்கு உதவினர்.

இது குறித்து அப்பகுதி முக்கியஸ்தர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:

“எமது கிராமத்தை அண்டிய பகுதிகளில் அதிகளவிலான யானைக்கூட்டங்கள் உலாவுவது அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் குறிப்பாக இரவு நேரங்களில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொருவரின் உயிரும் பெறுமதியானது என்பதால், உயிர் அல்லது உடைமைச் சேதங்கள் ஏற்படாத வகையில் மிகவும் அவதானத்துடன் பொறுப்பாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

26 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

49 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0