உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்பினால் கடுமையான நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
112 பார்வைகள்

இலங்கையில் பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் (Kerosene) பயன்படுத்தப்படுவது தொடர்பாக தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இலங்கை பொலிஸ் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகளை அடுத்து நாடு தழுவிய அளவில் பொலிஸார் இவ் விசேட சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட சுமார் 100 பயணிகள் பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகத்திற்குரிய மேலும் பல பேருந்துகளிலிருந்து எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

டீசல் லீற்றர் ஒன்றின் விலையை விட மண்ணெண்ணெயின் விலை குறைவாக இருப்பதால் கூடுதல் இலாபத்திற்காகப் பல பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து பயன்படுத்துகின்றனர். இந்த சட்டவிரோத செயலால் பேருந்துகளின் எஞ்சின்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு தீவிர காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இலாப நோக்கம் இருந்தாலும் சுற்றுச் சூழல் மாசடைவதுடன் வாகனத்தின் இயந்திரப் பாதிப்பும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றது.

அத்துடன் கேன்கள் அல்லது கொள்கலன்களில் சாதாரண அளவுக்கு அதிகமாக மண்ணெண்ணெய் வாங்குபவர்கள் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கவோ அல்லது பயன்படுத்தவோ துணை போகக் கூடாது என பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

அண்மையில் கூட கல்முனை தலைமையக பொலிஸாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 3 பயணிகள் பேருந்துகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர கொரோனா காலப்பகுதி மற்றும் தற்போது எரிபொருள் நெருக்கடி காலப்பகுதிகளில் கல்முனை பிராந்தியத்தில் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து முதல் தனியார் கனரக வாகனங்கள் மண்ணெண்ணெய் எரிபொருளை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இது தவிர பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து வாகனங்கள் திடீர் சோதனைகளின் போது சட்டவிரோதமாக 100 லீற்றருக்கும் அதிகமான மண்ணெண்ணெய் கேன்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

3 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

54 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

37 0 0
இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

57 0 0