உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மடு அன்னையின் ஆவணித் திருவிழா குறித்து மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
115 பார்வைகள்

எதிர்வரும் ஆவணி 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடு அன்னையின் ஆவணித் திருவிழா தொடர்பாக விசேட முதலாவது கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (31) மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் திணைக்கள தலைவர்கள்,பிரதேச சபைகளின் செயலாளர்கள்,தவிசாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,கடற்படை ,இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள் ,வைத்தியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர் வரும் 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் இடம் பெற்று 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் அதனை தொடர்ந்து 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவிற்கு வருகை தர உள்ள தோடு,எதிர்வரும் மடு அன்னையின் திருவிழா காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை என்பதினாலும் இம்முறை பல இலட்சக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தர உள்ளார்கள் என்பதன் அடிப்படையில் அனைத்து வித ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக சுகாதாரம் , மருத்துவம், சாரணர் சேவை,கழிவு அகற்றும் நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் , மின்சாரம், உணவு மற்றும் கடைகள் , போக்குவரத்து, சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது கலந்து கொண்ட திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.இந்த நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 11 மணிக்கு மடு திருத்தலத்தில் 2 ஆவது கலந்துரையாடலை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

58 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

54 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

37 0 0
இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

57 0 0