உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் கேரளா கஞ்சா கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
87 பார்வைகள்

யாழ்ப்பாணத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட 250 கிலோகிராம் கேரளா கஞ்சாவில் 16 கிலோ கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வல்லிபுரம் கடற்கரைப் பகுதி ஊடாக யாழ்ப்பாணத்துக்கு இந்தக் கேரளா கஞ்சா கடந்த வாரம் கடத்திச் வரப்பட்டதாக புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளிலும் வடமராட்சிப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வந்த நிலையில், நெல்லியடி பகுதியில் உள்ள பற்றைக்காடுகளுக்குள் கஞ்சா பொதி காணப்படுவதாக கிடைத்த தகவலின் பிரகாரம் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், அதனை கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட பொதி 16 கிலோகிராம் எனவும் அவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சாவை சிறு சிறு பொதிகளாக வடமராட்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளுக்கு கடத்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பிலும் விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த கஞ்சா தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள்; மக்கள் அச்சத்தில்.!

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில்…

68 0 0
இலங்கை செய்திகள்

இன்று முதல் மூடப்படும் சங்குப்பிட்டி பாலம்.!

சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று புதன் கிழமை (07.10.2026) முதல் திங்கட்கிழமை 12.10.2026 வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில், இன்று காலை 9…

63 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் சர்வதேச தரநிலை தொடர்பாக கலந்துரையாடல்.!

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார…

74 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள்.!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 புதிய மதுபானசாலைகளை (பார்களை) ஆரம்பிப்பதற்கான அனுமதிப் பணம் உரிய பிரதேச செயலகங்களில் செலுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2024 ஆம்…

86 0 0