உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தமிழரசுக் கட்சியின் வழக்கு ஓகஸ்ட் 28 இற்கு ஒத்திவைப்பு!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
45 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு – ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு – திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இன்று இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பாக வழக்காளி மற்றும் ஏனைய எதிராளிகளின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதனையடுத்து இந்தக் கட்டளை வழங்கும் திகதியை நீதிமன்றம் அறிவித்தது.

அந்தக் கட்டளைக்குப் பின்னரே அடுத்த கட்டமாக மூல வழக்கு மீதான விவகாரத்தை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கில் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பில் தமது எழுத்துமூல சமர்ப்பணத்தை தாமே முன்வைத்தார்.

எதிராளிகளான தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் முன்னைய பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் எழுத்து மூல சமர்ப்பணங்களை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.

இதுபோல் ஏனைய எதிராளிகளான சிறீதரன் எம்.பி., குகதாசன் எம்.பி., சீ.யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரனும், வழக்காளி தரப்பில் வழக்காளியின் சட்டத்தரணியும் இந்த விவகாரத்தையொட்டி தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்திருந்தமையை அடுத்து அந்த விவகாரத்தையொட்டி நீதிமன்றின் கட்டளை ஓகஸ்ட் 28ஆம் திகதி வழங்கப்படும் எனத் தெரிவித்து நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

51 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

59 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

46 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

67 0 0