கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாம் கட்ட பணிகள் ஆரம்பித்து வைப்பு.!
கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாம் கட்ட பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் திரு.புஷ்பா விஸ்வநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.ராஜாமணி பிரசாந்த் அவர்களின் தலைமையிலும் முழுமையான ஒத்துழைப்புடனும், ரூபாய் 200,0000/- செலவில் இத்திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகளுக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான கணபதி கண்ணதாசன் மற்றும் அமிதா ஆனந்த், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும், நிகழ்வின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச சபை உறுப்பினர்களால் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.



