உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு இலங்கை அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியம் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
146 பார்வைகள்


மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம்.

எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம்  என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.

அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது.

இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.

எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய  நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

மேற்படிச்  சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

99 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

128 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

117 0 0