உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த சீனாவுடன் கை கோர்க்கத் திட்டம்

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
132 பார்வைகள்

இலங்கையில் நிலவும் யானை – மனித மோதலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூங்கில் உயிரி வேலிகளை (Bamboo bio-fences) அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங்கில் உள்ள மூங்கில் மற்றும் பிரம்பிற்கான சர்வதேச மையத்திற்கு (INBAR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

இவ்விஜயத்தின் போது, அக்குழு மையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

இதில் மூங்கில் பயிர்செய்கை, மேம்பட்ட பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகளின் வளர்ச்சி ஆகியவை குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

யானை – மனித மோதலுக்கு நிலையான தீர்வாக இலங்கையில் மூங்கில் உயிர் வேலித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவின் ஆதரவை பிரதி அமைச்சர் ஜெயக்கொடி உத்தியோகபூர்வமாகக் கோரினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பம், தொழில்நுட்ப நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு மற்றும் சிறந்த நடைமுறைகளை வழங்கச் சீனத் தரப்பு தனது ஆயத்தத்தை வெளிப்படுத்தியது.

மேலும், இத்திட்டம் யானை – மனித மோதலுக்கு நீண்டகாலத் தீர்வை வழங்குவதோடு, மூங்கில் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனச் சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

99 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

128 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

117 0 0