உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக – யாழ். சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
142 பார்வைகள்

மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை செய்து கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் சிறிலங்கா அரச தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஒப்பமிட்டு இன்றைய தினம் (28.07.2026) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஒரு விரிவான முயற்சியின் பகுதியாகவும் இருக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு கொள்கை அளவில் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் எதிரப்பைக் கொண்டிருக்கவில்லை என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது, நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகார அமைப்பால் வழங்கப்படும் ஒரு சலுகையாகவோ அல்லது நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடும் நடவடிக்கையாகவோ பார்க்கப்படும் சூழலை உருவாக்கக் கூடாது என்பதில் தாங்கள் தீவிர கவனம் செலுத்துவதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனத்தையும், நீதித்துறை மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் தராமல் இருப்பது இன்றியமையாததாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக இரத்து செய்து, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முனையும் தருணத்தில் மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் விடயத்தைப் பரிசீலிக்க முடியும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது. குறுகிய அல்லது குறிப்பிட்ட நோக்கம் கருதிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், அரசியலமைப்புவாதத்திற்கான மரியாதையைக் குறைப்பதுடன், மக்களாட்சியின் நல்நெறிப் கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் முயற்சிகளை அரச தலைவர் மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிட வேண்டும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

99 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

128 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

117 0 0