உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சமிந்த விஜேசிறிக்கு சிறைத்தண்டனை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
166 பார்வைகள்

இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் அவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், பண்டாரவளை நகர சுற்றுவட்டத்திற்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்டோர் ஜீப் ரக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனத்தை பொலிஸ் ஜீப் ஒன்று முந்திச் சென்றதாகவும், இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, அவர்களைத் தடுத்து வைத்தமை மற்றும் உடல் ரீதியான தீங்கு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குற்றம் சாட்டப்பட்டவர்களான சமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதி பந்துல ரத்நாயக்க ஆகியோர் 4 குற்றச்சாட்டுகளிலும், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரியான ரசிக கருணாதிலக்க 3 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர். இருப்பினும், ஓட்டுநர் பந்துல ரத்நாயக்க உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுகளில் சமிந்த விஜேசிறி குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

99 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

128 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

117 0 0