உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமைச்சர் வசந்த சமரசிங்க உடனே பதவி விலக வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
193 பார்வைகள்

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து வரும் நிலையில், நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களும் மூலப்பொருட்களும் மிக வேகமாக விலை உயர்ந்து வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனையான பெரிய முட்டை ஒன்று தற்போது 46 – 47 ரூபாவாகவும், 45 கிராம் சிறிய முட்டை 42 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

உலகளவில் யுத்தம் நடைபெறுகின்றதா அல்லது ஹோர்மூஸ் நீரிணையில் பிரச்சினை உள்ளதா என வினவும் வகையில் ஒரே அடியில் 20 ரூபாய் வரை முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எதிர்க்கட்சியினரான தற்போதைய ஆட்சியாளர்கள் அன்று கூறியது போல், முட்டை விற்பனையில் அமைச்சர்களுக்குத் தரகுப் பணம் கிடைப்பதனாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது.

கீரி சம்பா அரிசி சந்தையில் நிலவும் முறைகேடான வணிகக் கும்பலின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வசந்த சமரசிங்க அமைச்சரால் முடிவதில்லை. அமைச்சரின் பொறுப்பு திருடர்களைப் பிடிப்பது அன்று. மாறாக, நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். அவருக்குப் பொலிஸ் பணியைச் செய்ய விருப்பமாக இருந்தால், பொலிஸ்மா அதிபர் பதவியை வழங்கிவிட்டுத் தகுதியான ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும்.

அரிசிச் சந்தையின் முறைகேடுகளுக்கு எதிராகத் தாங்கள் குரல் கொடுக்கும்போது, விவசாய நிலங்களில் சோளம் பயிரிடுமாறு விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த கூறுவது அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஆலை உரிமையாளர்கள் விலையை உயர்த்தவே வழிவகுக்கும். மேலும், விவசாயிகள் பற்றிப் பேசி நாடாளுமன்றம் சென்ற நாமல் கருணாரத்ன போன்றவர்கள் இன்று விவசாயிகளுக்கு எதிராகப் பேசுகின்றனர்.

தற்போது இந்த முறைகேடான வணிகக் கும்பலினால் நுகர்வோரின் அடிப்படை உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன. அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

99 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

128 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

117 0 0