உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ராஜபக்ஷக்களை சிறைக்கு அனுப்புவதே அரசின் திட்டம்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
41 பார்வைகள்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதற்கே அரசு முயற்சிக்கின்றது என்றும், அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்குக் கிடையாது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை. மாறாக அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே செயற்படுகின்றது. நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டாலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. விவசாயிகளின் போராட்டங்களுக்கும் இன்றுவரை நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.

நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றது.

ராஜபக்ஷக்களை சிறைக்கு அனுப்புவதற்காகவே நீதியரசர்களின் பதவிக்காலம் நீடிக்கப்படுகின்றது என்று ஆளும் தரப்பு உறுப்பினர் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்கு இல்லை. நீதியரசர்களின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0