உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
45 பார்வைகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக எழுகின்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து பள்ளிவாசல் சார்பாக அந்தந்த பள்ளிவாசலின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு,  எதிர்காலத்தில் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை இதன்போது முன்வைத்தனர்.

சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், அம்பாறை மாவட்ட சிறுவர் மகளிர் நன்னடத்தை அதிகாரி உட்பட சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் மகளிர் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச பெண்கள் அமைப்பின் தலைவிமார், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

21 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

52 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

64 0 0
இலங்கை செய்திகள்

பழுதடைந்த பேருந்தால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் தாமதம்!

பருத்திதுறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் போக்கறுப்பு 762 வழி சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரவு தங்கல் பேருந்து பருத்திதுறையில் இருந்து மாலை…

49 0 0