உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

குளக்கரையில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
142 பார்வைகள்

அனுராதபுரம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலலுவெவ குளக்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதேச மக்களின் உதவியுடன் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அனுராதபுரம், நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீதிவான் விசாரணைகளுக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் கெக்கிராவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் (20) கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் மதிக்கத்தக்க கைச்சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு பவுண் மதிக்கத்தக்க…

17 0 0
இலங்கை செய்திகள்

கல்லூண்டாய் பிரச்சினைக்கு மாநகர நிர்வாக பிரச்சினையே காரணம் – முதல்வர் குற்றச்சாட்டு!

கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினைக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிர்வாக பிரச்சினையே காரணம் என முதல்வர் மதிவதனி குற்றம் சாட்டியுள்ளார். கல்லூண்டாய் குப்பை மேட்டினை பார்வையிட்ட பின்னர்…

27 0 0
இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் நேற்று பகல் துணிகர திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நவீன சந்தை கடையில் இருந்த கைபேசி ஒன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.…

22 0 0
இலங்கை செய்திகள்

இளம் குடும்பப் பெண் வெட்டிப் படுகொ@லை! : கணவன் கைது!!

பொலன்னறுவை, தமன்கடுவை பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொ@லை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை அவரது சொந்த வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

27 0 0