உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
87 பார்வைகள்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) மன்னார் கிளை வளாகமானது இன்றையதினம் திங்கட்கிழமை (27) காலை 10 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் ஆலய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை கடந்த 14 வருடங்களாக மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த நிலையில் தற்போது அதியுயர் வசதிகளுடன் புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த திறப்பு விழா நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி அசங்க பண்டார தென்னகோன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வமத தலைவர்கள் ஆசியுடன் குறித்த வங்கி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வங்கியின் செயல்பாடுகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய…

5 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை…

20 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சிறப்பு இறை பிரார்த்தனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக மீட்டு வர வலியுறுத்தி, காரைதீவில் சிறப்பு…

37 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் பொலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவீடுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கு இடையே இன்றைய தினம் ஏற்பட்ட முறுகல் நிலையானது காத்தான்குடி…

26 0 0