உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
83 பார்வைகள்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 8 பாடநெறிகளுக்காக 153 புதிய பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இவருடன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் கலைச்செல்வி தீயும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்குபற்றினார்.

இப்பயிற்சி நெறிகளில் இணையும் மாணவர்களுக்கான 6 மாத காலப் பயிற்சி, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்று இதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மலையக இளைஞர், யுவதிகளின் தொழிற்திறனை மேம்படுத்தி, அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு கனவுகளை நனவாக்கும் தேசிய நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

22 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

52 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

64 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

45 0 0