உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

பிள்ளையானிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
22 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடந்த 7 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று…

56 0 0
இலங்கை செய்திகள்

சிறை நெரிசலைக் குறைக்க வீட்டுக்காவலை அறிமுகப்படுத்தவும் யோசனை!

இலங்கையின் சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பூகொடை புதிய…

20 0 0
இலங்கை செய்திகள்

வத்தளை துப்பாக்கிச் சூடு – இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களைக்…

64 0 0
இலங்கை செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்!

2026 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி…

34 0 0