உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
56 பார்வைகள்

நாட்டில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதுடன் 80,114 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 16,950 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 16,021 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5534 பேரும், கண்டியில் 5437 பேரும், களுத்துறையில் 5245 பேரும் இரத்தினபுரியில் 4482 பேரும், காலியில் 4430 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

81 0 0