வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்; போக்குவரத்து பாதிப்பு.!
ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை வேளையில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று 23 ஆம் திகதி அதிகாலை வேளையில் ஹட்டன் கொழுப்பு பிரதான சாலையில் மல்லியப்பு டீ விழா விருந்தினர் விடுதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக இந்த பாரிய மரம் வீதியின் குறுக்கே சரிந்து விழுந்த நிலையில் ஹட்டன் – கொழுப்பு, ஹட்டன் – கண்டி செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஹட்டன் பொலிஸார் அந்த பாரிய மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
மரம் வெட்டி அகற்றப்பட்ட பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என ஹட்டன் வலய பொலிஸ் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.