உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
46 பார்வைகள்

கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய இல்லத்தில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனியுடன் இணைந்து நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில், மலையகச் சமூகத்தின் முன்னுரிமைகள், டித்வா புயலால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலவிவரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இச்சந்திப்புத் குறித்துத் தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான், அவர்களின் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

24 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0