உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
52 பார்வைகள்

அரசாங்கத்தினால் 2013 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் சுவீகரிப்பு வர்த்தமானி மூலம் வலி வடக்கு மக்களின் 6317 ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெறுவதற்கான அழுத்தத்தை வழங்குமாறு யாழ்ப்பாணம் வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோரிக்கையை முன்வைத்தார்கள்.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதுவர்களுக்கும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கையில் யுத்தம் நிறைவடைந்து 35 வருடங்கள் கடந்தும் பொதுமக்களுடைய காணிகள் பாதுகாப்பு படைகளினால் விடுவிக்கப்படாமல் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வலி வடக்கு மக்களின் சுமார் 6ஏக்கருக்கு மேற்பட்ட காணி பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வர்தமானி இதுவரை மீளப் பெறப்படவில்லை.

பொதுமக்களுடைய காணிகளை பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து விடுவிப்பதற்கும் சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, மனித உரிமைகள், நல்லாட்சி, சமூக நீதி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபன்மை மக்களின் நீண்டகாலமாக பாதித்து வரும் காணி உரிமைப் பிரச்சினைகள், காணி மீட்பில் நிலவும் தாமதங்கள், காணி அபகரிப்பு, மற்றும் சுவீகரிப்பு அவற்றின் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதார சவால்கள் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் முன்வைக்கப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் கார்மென் மொரேனோ – ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், ஜெர்மனி தூதுவர் ரெமி லம்பேர்ட், பிரான்ஸ் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் , இத்தாலி தூதுவர் விபே டி போயர் மற்றும் தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் செல்வி சாரா பொன்சேகா சில்வா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி,…

45 0 0
இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

30 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல்…

36 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

70 0 0