உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
64 பார்வைகள்

கண்டி பிரதான நீர் விநியோகத் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர மற்றும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கண்டி மாவட்டத்தின் சில சேவைப் பகுதிகளில் இன்று (22)புதன்கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை 4 மணிநேரத்திற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த நீர்வெட்டு உடுவாவல, பொல்வத்தை வீதி, கிளவத்தை, வாஸ்கேவத்தை, உட பொக்காவல, பல்லே பொக்காவல, பிஹங்கேவத்தை, அஹஸ்லியத்த, கொட்டுவேவத்தை, நாகஹமுல வீதி, தவளன்கொட, பலகொல்ல, ஹப்புகொட, பட்டியவத்தை, ராஜபிஹில்ல, மொரகஹவெல, அத்தரகம, உல்லாதுபிட்டிய வீதி, பொஹோரபெத்தன்ன வீதி மற்றும் அத்தரகம தெகிந்த வீதி ஆகிய பகுதிகளுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் மேலும் பல பகுதிகளுக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேடவல (பழைய) சேவைப் பகுதி
காவும்கொஹே வீதி, கோனிகொட, ஜெயந்தி வீதி, குருக்கட்டே, பால்கும்புர, இடமேகம, அம்பேகம, கொரொக்கஸங்க வீதி, எலமல்பட்ட, கொட்டுதென்ன, பெதியகொடவத்தை, களுவான, போத்தோட்ட, ஹரன்கஹதென்ன, தொடந்தென்ன, கும்புரேகெதர, தெம்பரலொவ, திப்புட்ட மற்றும் தலபெல்லகொட வீதி.

கலகெதர சேவைப் பகுதி
கலகெதர, வேவபத, பொயாகொடவைச் சுற்றியுள்ள பகுதிகள், ரம்புக்கனை வீதி, பொஹோலியத்த வீதி மற்றும் குருணாகல் வீதி.

மேடவல (புதிய) சேவைப் பகுதி
படுகொட, அஹலகசின்ன, தித்தேனிய, ஓவிஸ்ஸ, வடகொட, தொபகம்மன, ஹெடேனிய, சூரியக்கும்புர, அம்பருப்ப, ஹரன்கஹவ, பொக்காவல, வலதென்ன மற்றும் பதிராட.

மாவத்தகம சேவைப் பகுதி
மாவத்தகம, பரந்தன வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

47 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

29 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

45 0 0