உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
131 பார்வைகள்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர் பகுhழயைச் சேர்ந்த  இரு தரப்பினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணைக்காக இரு தரப்பினரும்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது  இரு தரப்பினரும் வாக்குமூலம் வழங்கிய பின்னர்  சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்ததையடுத்து  பொலிஸ் நிலையத்தின் பல்வேறு  குற்றத்தடுப்பு பிரிவு  பொறுப்பதிகாரி    உப  பொலிஸ் பரிசோதகர்  கே.எல்.எம் முஸ்தபா கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரியின் அலுவலக அறையினை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

இவ்வாறு பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியினால் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்  பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே பொதுமக்களும் ஏனையோரும் வேடிக்கை பார்க்கும் வகையில் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றத்திற்காக இரு தரப்பினரையும் கைது செய்து, பொலிஸ் நிலையத்திலுள்ள இரு வேறு சிறைக்கூடுகளில் அடைத்தார்.

இச்சம்பவத்தின் போது   பொலிஸ் நிலையம்  வந்திருந்த சந்தேக நபரான  24 வயதுடைய இளைஞர்   இச்சம்பவத்தில் கைதாகி  சிறைக்கூடத்தில் இருந்தவர்களைத் தனது கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அவரை சம்பவ இடத்தில் கையும் மெய்யுமாகப் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திங்கட்கிழமை (20) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான்இ சந்தேகநபரைச் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வீடியோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கைத்தொலைபேசியைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலும், வழக்கின் விசாரணைகளை மறுதவணைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

102 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

124 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

123 0 0