உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

துருக்கித் தூதுவருடன் திலித் ஜயவீர எம்.பி. சந்திப்பு!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
25 பார்வைகள்

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட்டை, சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

துருக்கித் தூதரகத்தில், தூதுவரின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கை ஒரு தொழில்முனைவு நாடாக பரிணமிக்கும் பயணத்தில் துருக்கி குடியரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

துருக்கித் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சர்வஜன அதிகார கட்சியின் ஊடகச் செயலாளர் ஹசன் அல்அல்தீனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம்…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச்…

51 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

50 0 0