உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

ஜனாதிபதி மீதான நம்பிக்கை அதிகரிப்பு என்பது போலியான அறிக்கை.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
20 பார்வைகள்

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது” என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து உதய கம்மன்பில மேலும் கூறுகையில்,
“22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், வெறும் 1240 பேரை மட்டும் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்காது. தேசிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு விடயத்தை இவ்வளவு சிறிய மாதிரி அளவுடன் மதிப்பீடு செய்வது ஏற்புடையதல்ல” என்று சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி குறித்த தரவுகளை அவர் முன்வைத்தார்.

  • 2024 ஜனாதிபதித் தேர்தல்: 42% வாக்குகள்.
  • பொதுத்தேர்தல்: 62% வாக்குகள்.
  • 2025 மே மாத உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 43% வாக்குகள்.

“ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்துக்குள்ளேயே அரசின் வாக்கு வங்கி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரப் பாதிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில், இத்தகைய சாதகமான அறிக்கையை வெளியிடுவது நகைப்புக்குரியது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “ஜனாதிபதி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் இந்த அமைப்பு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான மக்கள் தீர்ப்பு வெளியாகும், மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்” என்று சவால் விடுத்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

14 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

11 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை  அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன…

87 0 0