உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
109 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபர் வசம் இரந்து ஐஸ் போதைப்பொருள் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 39000 ரூபா,ஒரு மின்னணு தராசு மற்றும் ஒரு கைபேசி இதர பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரின் வீடு உகண பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. எனினும் அவர் மாலிகா தென்ன பகுதியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஒரு தீவிர போதைப்பொருள் அடிமை எனவும்இ இவருடைய தந்தை ஒரு ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக உகண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச் சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் உகண பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பொறுப்பதிகாரி சுமித் குணவர்தன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20)…

46 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில்…

47 0 0
இலங்கை செய்திகள்

பசிலுக்கு மீண்டும் பிடியாணை.!

மாத்தறை காணி கொள்வனவு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக மாத்தறை தலைமை நீதிவான் இன்று செவ்வாய்க்கிழமை…

25 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைப்பு.!

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

30 0 0