நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைப்பு.!
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சபாநாயகரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஜூலை 5, 6 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட 31 பேர் உயிரிழந்தமையுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர்.
சம்பவத்தின் போது மேற்படி அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது அடிப்படைக் கடமைகளையும் பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றத் தவறியமை மற்றும் சட்டம் ஒழுக்கைப் பேணுவதில் தோல்வியடைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.