உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உக்ரேனில் 4 இந்தியர்கள் கொ#லை : ரஷ்யத் தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பு!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
74 பார்வைகள்

உக்ரேன் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்த நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யத் தூதரை இன்று (21) வரவழைத்த இந்திய அரசு, மொஸ்கோவிடம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து இந்தியாவின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும், விளக்கம் கோரவும் புது டெல்லியில் உள்ள ரஷ்யாவின் தூதரகப் பொறுப்பாளர் விளாடிமிர் லடானோவை வெளியுறவு அமைச்சகம் வரவழைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரேன் கடற்கரைப் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த வணிகக் கப்பல் ஒன்றில் பணிபுரிந்த நான்கு இந்தியர்கள் அண்மைய தாக்குதல் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என்று உக்ரேன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து, இந்தியா தனது தீவிர கவலையை ரஷ்யத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாகவும், நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 19 அன்று மாலை உக்ரேனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டபோது, கினியா-பிசாவு நாட்டின் கொடியை ஏந்திய சரக்குக் கப்பலான ‘எம்வி கோல்டன் லியோ’ (MV Golden Leo) தாக்கப்பட்டதில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயமடைந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்திய மறுநாளே இந்த இராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தானியங்களை ஏற்றிச் சென்ற அக் கப்பலில், ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0