உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
55 பார்வைகள்

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20) ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களினால் குறித்த குளத்திற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் 1000 குளங்கள் புனரமைப்பின் இவ் வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 குளங்களும், மொத்தமாக 10 குளங்கள் புனரமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 2 குளங்களுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி தலைவர், தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

14 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

11 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை  அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன…

87 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம்!

மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான மணலைப்…

40 0 0