உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

இந்தியாவின் முதலாவது டெங்கு தடுப்பூசியை சந்தைப்படுத்த அனுமதி

இந்திய செய்திகள் 9 மணி நேரம் முன்
84 பார்வைகள்

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, 4 முதல் 60 வயதுடையவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்படாதவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்பதால், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாத இடைவெளியில் 0.5 மில்லிலீற்றர் அளவு கொண்ட இரண்டு ஊசிகளாக இது செலுத்தப்படுகிறது.

உலக அளவில் பதிவாகும் டெங்கு பாதிப்புகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளதுடன், அங்கு டெங்குவின் 4 வகைகளும் பரவி வருகின்றன.

இந்நிலையில், தாகேடாவின் சர்வதேச அளவிலான மற்றும் இந்தியாவில் நடத்தப்பட்ட 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், நான்கு வகை டெங்கு வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பளிக்கும் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே உலக சுகாதார அமைப்பின் தகுதிச்சான்றைப் பெற்றுள்ள கியூடெங்கா தடுப்பூசி, 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் 43 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டு, 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

வன்முறையாக மாறிய போராட்டம் – டெல்லியில் சுமார் 70 பேர் கைது!

டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட…

21 0 0
இந்திய செய்திகள்

உக்ரேனில் 4 இந்தியர்கள் கொ#லை : ரஷ்யத் தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பு!

உக்ரேன் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்த நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யத் தூதரை இன்று (21) வரவழைத்த இந்திய அரசு, மொஸ்கோவிடம்…

19 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுத்த எம்.எல்.ஏ க்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்க்கண்டேயன் என்பவரே இந்த…

20 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் கன மழை – 19 பேர் பலி!

இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள…

43 0 0