உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
110 பார்வைகள்


கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று (20) உத்தியோகபூர்வமாக இந்நியமனம்  வழங்கப்பட்டது.

திருகோணமலையில் அமைந்துள்ள தலைமையகத்தில் புதிய தவிசாளர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

பதவியேற்பைத் தொடர்ந்து மாகாணத்தின் போக்குவரத்து நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதற்கட்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.


மேலும் கிழக்கு மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவைகளை மேலும் வினைத்திறனானதாகவும்இ மக்களுக்கு அசௌகரியங்களற்ற பாதுகாப்புமிக்க சேவையாகவும் மேம்படுத்துவதற்குத் தேவையான புதிய திட்டங்களை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்துவேன். என எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி குறிப்பிட்டார்.


இவர் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தின் காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.சுற்றாடல் அமைச்சின் மாவட்ட இணைப்பாளராகவும்இ மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் முதன்மைப் பங்காற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20)…

46 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில்…

47 0 0
இலங்கை செய்திகள்

பசிலுக்கு மீண்டும் பிடியாணை.!

மாத்தறை காணி கொள்வனவு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக மாத்தறை தலைமை நீதிவான் இன்று செவ்வாய்க்கிழமை…

26 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைப்பு.!

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

30 0 0