உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய தேசிய செயலமர்வு இன்று ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 22 மணி நேரம் முன்
79 பார்வைகள்



அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “அரச துறையின் மாற்றத்திற்காக தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய தேசிய செயலமர்வு” இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமாகியது.

மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்தச் செயலமர்வை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் அரச நிர்வாகப் பிரிவு, அதன் அரச நிர்வாகம் தொடர்பான செயற்திட்ட அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அரச துறையில் தரவுக் கட்டுப்பாடு, டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புடனும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவது குறித்து சிரேஷ்ட அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதே இந்தச் செயலமர்வின் பிரதான நோக்கமாகும்.

குறிப்பாக, சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், தரவு முகாமைத்துவம், ஒன்றிணைந்து செயல்படக்கூடிய அரச கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை சார்ந்த பயன்பாடு குறித்து இதில் பரந்த அளவில் கவனம் செலுத்தப்படும்.

மூன்று நாள் நிகழ்ச்சியில், தேசிய தரவுக் கட்டுப்பாட்டுச் சட்டகத்தை உருவாக்குதல், டிஜிட்டல் அரச சேவைகள், உற்பத்தித்திறன் சார்ந்த மற்றும் முகவர் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்படும். விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் குழுச் செயற்பாடுகள் மூலம் அரச அதிகாரிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தவும், சான்றுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் கலாசாரத்தை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் ஆஸ்திரேலிய அமைப்பு!

யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஆஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள்…

56 0 0
இலங்கை செய்திகள்

மயிலிட்டி துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை அகற்றுக.!

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை ஏற்படுத்துமாறும்…

47 0 0
இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20)…

50 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில்…

49 0 0