முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அஞ்சலி!
இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது அன்னாரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சேவைகளையும் அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.