பயிர்களை கால்நடைகள் அழித்தமையால் ஏற்பட்ட தகராறு; ஒருவர் கொ*லை.!
தனது கால்நடைகள் மற்றுமொரு நபரால் செய்கையிடப்பட்டிருந்த மரக்கறி பயிர்களை அழித்தமையால் ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹுங்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனது கால்நடைகளால் அழிக்கப்பட்ட பயிற்றங்காய் பயிர்களுக்கான இழப்பீட்டினை வழங்குவதற்காக குறித்த நபர், சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அவ்வேளை ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்த சந்தேகநபரும் அவரது சகோதரரும் இணைந்து, கால்நடைகளின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, தப்பியோடிய இரு சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.