உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

மர்மம் விலகாத விசாரணைகளுக்கு மத்தியில் நாளை விடைபெறுகின்றார் சி.டி.விக்கிரமரத்ன!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
76 பார்வைகள்

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள், நாளை திங்கட்கிழமை முழுமையான பொலிஸ் மரியாதைகளுடன் நடத்தப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

அன்னாரது பூதவுடல், கொழும்பு 08, பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை முதல் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தனது இல்லத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இதுவரையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இது தொடர்பில் பொலிஸ் குழுக்கள் பல கோணங்களில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

நாட்டின் மிக முக்கிய பொறுப்பை வகித்த ஒருவரின் மரணம் என்பதால், இந்த விசாரணை மிக உன்னிப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மீதான நம்பிக்கை அதிகரிப்பு என்பது போலியான அறிக்கை.!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது” என்று பிவிதுறு ஹெல…

8 0 0
இலங்கை செய்திகள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் வெற்றி.!

அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம்…

9 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாலுபோத்த பகுதியில் திங்கட்கிழமை…

10 0 0
இலங்கை செய்திகள்

உயிரை மாய்க்க முயன்ற கைதி.!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் வைத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சவரப் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம்…

10 0 0