உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

உயிரை மாய்க்க முயன்ற கைதி.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
12 பார்வைகள்

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் வைத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சவரப் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் நேற்று பிற்பகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, தையிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த நபர், மட்டக்களப்பில் மூன்று திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார்.

பின்னர் வழக்கு விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாக இருந்ததால், அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கடந்த 13-ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் திகதி வரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட அவர், பிற்பகல் 3.00 மணியளவில் அங்கிருந்த மலசல கூடத்திற்குள் சென்று சவரப் பிளேடால் தனது கழுத்தையும் கையையும் அறுத்துக் கொண்டுள்ளார்.

படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் தடயவியல் பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20)…

46 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில்…

47 0 0
இலங்கை செய்திகள்

பசிலுக்கு மீண்டும் பிடியாணை.!

மாத்தறை காணி கொள்வனவு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக மாத்தறை தலைமை நீதிவான் இன்று செவ்வாய்க்கிழமை…

26 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைப்பு.!

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

30 0 0