உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
20 திங்கள்

திடீரென சரிந்து விழுந்த மண்மேடு; ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
67 பார்வைகள்

கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட, படுகொட பகுதியில் வீடு கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, வீடு நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட நிலப்பகுதியில் அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குழிக்குள் வேலை செய்து கொண்டிருந்த நபர் மீது எதிர்பாராத விதமாக மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

சம்பவத்துக்குப் பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அகுரணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நூதனமுறையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு – சந்தேக நபர் கைது!

மட்டக்களப்பில் நூதனமாக மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய திருடன் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற…

55 0 0
இலங்கை செய்திகள்

மர்மம் விலகாத விசாரணைகளுக்கு மத்தியில் நாளை விடைபெறுகின்றார் சி.டி.விக்கிரமரத்ன!

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள், நாளை திங்கட்கிழமை முழுமையான பொலிஸ் மரியாதைகளுடன் நடத்தப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப்…

46 0 0
இலங்கை செய்திகள்

சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் குறித்து இடதுசாரி மையம் பகிரங்கக் குற்றச்சாட்டு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்றும், அதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகத் தமக்குத் தீவிர சந்தேகம் எழுந்துள்ளது என்று இடதுசாரி மையத்தின்…

21 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு ரணில் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் அஞ்சலி!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானதையடுத்து, அவரின் பூதவுடலுக்கு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்…

31 0 0