உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

77 பார்வைகள்

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு நோயின் பரவல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, காய்ச்சல் அல்லது டெங்கு நோய்க்கான ஏனைய அறிகுறிகள் தென்படுமாயின், காலதாமதம் செய்யாது உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் இதர அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், தகுதியான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் அவசியமாகும் என்று சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் சங்கு கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம்!

பல தசாப்தங்களாகக் காணி உரிமைக்காகப் போராடும் மலையக மக்களின் அவலங்களையும், அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி சங்கு கலைக்கழகத்தினால் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ என்ற வீதி…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற…

61 0 0
இலங்கை செய்திகள்

விவசாயிகளின் வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – திலித் ஜயவீர வலியுறுத்தல்!

“எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால், இன்றைய அரசு இந்நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக் கொ#லை செய்த கணவன்!

காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொ#லை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

64 0 0