உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

செம்மணி புதைகுழி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கும்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
62 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தற்போதைய அரசின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைத்து மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதி என்பதைச் சுட்டிக்காட்டினார்.

வரலாற்றில் முதன்முறையாக இந்த அரசுக்கு வடக்கு மக்களிடமிருந்து பலத்த ஆதரவு கிடைத்துள்ளது என்றும், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல வழிகளிலும் நல்லிணக்கத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் தெற்கு என இரு தரப்பிலும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது பெற்றோர் இன்றும் கண்ணீர் வடிக்கும் நிலை நீடிக்கின்றது என்று குறிப்பிட்ட நீதி அமைச்சர், அந்த வேதனையைத் தீர்க்க அரசு முன்னுரிமை அளிக்கின்றது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“நாங்கள் ஆட்சிக்கு வரும்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் போதிய ஆளணி வளம் இருக்கவில்லை. நாம் உடனடியாகப் புதிய ஆட்சேர்ப்புகளைச் செய்து 60 பேரை அதில் இணைத்துள்ளோம். இதற்கென வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது தலா மூன்று பேர் கொண்ட 15 விசாரணைப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், நிலுவையிலுள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

செம்மணி விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், அது போன்ற சம்பவங்களில் உண்மையை வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்றும், அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு; சில பொலிஸ் அதிகாரிகளும் ஆதரவு.!

நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள நோர்வூட் NC தேயிலைத் தோட்டப் பிரிவிலும், கெசல்கமு ஓயாவிற்கு அருகில் உள்ள போர்ட்ரீ (Portree) தோட்டத்திலும் இரவு நேரங்களில் இடம்பெற்று…

57 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து.!

இன்று காலை 10.45 மணியளவில் ஹட்டன் நகர மத்தியில் உள்ள வெள்ளைக்கோட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளை தவறான திசையில்…

59 0 0
இலங்கை செய்திகள்

தோட்டப் பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜாமணி பிரசாந்த் நேற்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவிற்கு மனநோய் முற்றியதால் மக்கள், அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்.!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியினால் அமைதியின்மை ஏற்பட்டதன் காரணமாக அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேறியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று…

50 0 0