உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
51 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் பாணந்துறை பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோதிலும், அந்த நேரத்தில் சரத் வீரவங்ச அங்கு இருக்கவில்லை.

இருப்பினும், அவர் இன்று (16) கம்பஹாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியா மேயர் நீக்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு.!

வவுனியா மாநகர சபை மேயரைப் பதவியிலிருந்து நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம்…

1 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

59 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

77 0 0
இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாத உயர்தர விண்ணப்பதாரர்களுக்கு புதிய நடைமுறை!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் , தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய…

63 0 0