உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது.!

இலங்கை செய்திகள் 23 மணி நேரம் முன்
80 பார்வைகள்

பண மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி, வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 27,500,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அதன் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய, நேற்றைய தினம் (14) காலை ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதுடைய சந்தேகநபரான அவரை இன்றைய தினம் (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் அரச உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் அரசு உத்தியோகத்தர் ஒருவர்…

45 0 0
இலங்கை செய்திகள்

அரச நிறுவனங்கள் மீது பாய்ந்த டெங்கு ஒழிப்பு சட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு…

38 0 0
இலங்கை செய்திகள்

விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் ஆரம்பிப்பு.!

மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மனோன்மணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் மாணவர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்…

45 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கும்.!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி…

57 0 0