உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
15 புதன்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
109 பார்வைகள்

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு 50,000 ரூபாய் வரையான நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடனல்ல, மீளச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) நிலை 3, 4 மற்றும் 5க்கு உட்பட்ட 100 தொழிற்பயிற்சி பாடத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் பயன்பெறலாம்.

மாணவர்களைத் திறன் மிக்கவர்களாக உருவாக்கி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர், இந்த நிதியுதவி குறித்த விரிவான தகவல்களை www.etfb.lk என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம்; பின்னணியில் அநுர அரசு இல்லை.!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…

50 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் நடராசாவின் தாயார் காலமானார்.!

‘ராவய’ வெளியீடான ‘ஆதவன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பிராசா நடராசாவின் தாயார் திருமதி விசாலாட்சி…

54 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல்.!

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி…

62 0 0
இலங்கை செய்திகள்

உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு.!

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது…

69 0 0