உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

ஹக்கீம் மற்றும் ரிஷாட் முஸ்லிம் சமூகத்தின் அதிகாரங்களைத் தமிழ் கட்சிகளிடம் அடகு வைக்கின்றனர்!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
51 பார்வைகள்

முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக சமத்துவ மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் வைத்தியர் வை.எல்.எம். யூசுப் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று (14) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த திங்கட்கிழமை (13) தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கென புதிய கூட்டணி ஒன்றை அமைத்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தச் சவாலையும் கண்டனத்தையும் முன்வைத்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:


“நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகவே இந்த 6 கட்சிகளின் இணைவைப் பார்க்க முடிகிறது.

மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக மாறியுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள், தங்களை மீண்டும் செல்லுபடியான காசுகளாக மாற்றிக் கொள்வதற்காகவே கொழும்பில் ஒன்றுகூடி இவ்வாறானதொரு பொதுத் தளத்தை அமைத்துள்ளனர். இவர்களால் நிச்சயமாக எமது மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை.”


“இதுவரை காலமும் இனவாதமும் மதவாதமும் பேசி, தற்போது மக்கள் செல்வாக்கை இழந்து வருவதனாலேயே ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் மக்கள் எழுச்சி என்ற போர்வையில் புதிய வடிவத்தில் வந்துள்ளனர். பழைய சோற்றைச் சூடாக்கி, இப்போதுதான் சமைத்த சுடு சோறு என்று கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இவர்களது பழைய கதைகள் எடுபடாத காரணத்தால், புதிய வடிவில் கட்டுக்கதைகளைக் கூறி ஏமாற்ற முனைகிறார்கள். இக்கூட்டணியின் உருவாக்கம் எமக்கு பாரிய சந்தேகத்தை எழுப்புகிறது.”

பகிரங்க விவாதத்திற்குத் தயாரா? – தலைவர்களுக்குச் சவால்

முஸ்லிம் சமூகத்தின் நில, நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்த வைத்தியர் யூசுப், தமிழ் – முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எந்த நேரத்திலும் பகிரங்க விவாதத்திற்கு வரத் தயாராக இருந்தால், அவர்களுக்கு பிரச்சினைகள் குறித்து முழு விளக்கமளிக்கவும் தான் தயாராக இருப்பதாக அவர் இதன்போது சமத்துவ மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் வைத்தியர் வை.எல்.எம். யூசுப் சவால் விடுத்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

66 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

55 0 0
இலங்கை செய்திகள்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

86 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

55 0 0