உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

இலங்கை உணவுகளுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
77 பார்வைகள்

‘டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்’ (Travel And Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 உணவுக்கான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவரிசையில் முதலிடத்தை மெக்சிகோவும், இரண்டாம் இடத்தை இத்தாலியும், மூன்றாம் இடத்தை ஸ்பெயினும் பெற்றுள்ளதுடன், இலங்கை 50 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உணவுக் கலாச்சார பாரம்பரியம், பிராந்திய உணவு வகைத்தன்மை, தெரு உணவு (Street Food) கலாச்சாரம், உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாடு, உயர்தர உணவுகள், நிலைத்தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும் தனித்துவமான உணவு அனுபவங்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளதாக டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய ஐரோப்பா, ஆசிய-பசிபிக் பிராந்தியம், அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பிராந்தியங்களின் பல முன்னணி உணவு சுற்றுலாத் தலங்கள் இம்முறை ‘டாப் 50’ (Top 50) பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

நறுமணம் மிக்க நறுமணப் பொருட்கள், உள்ளூர் மூலப்பொருட்கள் மற்றும் பல்வேறு கலாச்சார உணவு மரபுகள் காரணமாக, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான உணவு அனுபவத்தை வழங்கும் நாடாக உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெரு உணவுகள் முதல் கடலோர உணவகங்கள் வரை பல்வேறு வகையான உணவுகளை சுவைப்பதற்கான வாய்ப்புகள் இலங்கையில் காணப்படுவதாக டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் உணவுக்கு சிறந்த 10 இடங்களும் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இதன்படி

கொழும்பு: சோறு மற்றும் கறி, கொத்து ரொட்டி, அப்பம் மற்றும் புதிய கடல் உணவுகள்.

காலி: கடல் உணவு வகைகள், பாரம்பரியக் கறிகள் மற்றும் காலனித்துவ கால உணவகங்கள்.

கண்டி: பாரம்பரிய சோறு மற்றும் கறி, உள்ளூர் இனிப்புப் பண்டங்கள்.

நீர்கொழும்பு: களப்பு கடல் உணவுகள், சுடப்பட்ட மீன் மற்றும் கடல் உணவுக் கறிகள்.

எல்ல: இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் மலைநாட்டு உணவு முறைகள்.

யாழ்ப்பாணம்: காரசாரமான நண்டுக்குழம்பு, தோசை மற்றும் தமிழ் பாரம்பரிய தனித்துவமான சுவைகள்.

மிரிஸ்ஸ: கடற்கரையோர உணவகங்கள் மற்றும் புதிய கடல் உணவுகள்.

நுவரெலியா: தேயிலை சார்ந்த உணவு வகைகள், பேஸ்ட்ரிகள் மற்றும் காலனித்துவ கால கிளாசிக் உணவுகள்.

ஹிக்கடுவை: சுவையான கடல் உணவுகள் மற்றும் துடிப்பான கடற்கரையோர உணவு அனுபவங்கள்.

திருகோணமலை: புதிய கடல் உணவுகள் மற்றும் உண்மையான கிழக்குக் கடற்கரை உணவு முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அங்கீகாரமானது, இலங்கைக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையை, குறிப்பாக உணவு சார்ந்த கலாசாரப் பயணங்களை விரும்புவோரை மேலும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

66 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

55 0 0
இலங்கை செய்திகள்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

86 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

55 0 0