உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

பணத் தகராறில் குடும்பஸ்தர் வெட்டிக் கொ*லை!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
46 பார்வைகள்


அம்பாந்தோட்டை மாவட்டம், வலஸ்முல்லை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பணக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக அமைந்தது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது, உயிரிழந்தவரும் கொலையைச் செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய அயல்வீட்டு இளைஞரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரான இளைஞர் அந்தப் பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ளார்.

இவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

62 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

67 0 0
இலங்கை செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த விளக்கம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹக்கீம் மற்றும் ரிஷாட் முஸ்லிம் சமூகத்தின் அதிகாரங்களைத் தமிழ் கட்சிகளிடம் அடகு வைக்கின்றனர்!

முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக்…

46 0 0